Avathuvadi

ஆவத்துவாடி கிராமம்: தென்பெண்ணை ஆற்றங்கரையில் இயற்கையான சூழலில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம். காவேரிபட்டிணத்தில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு கிராமப் பஞ்சாயத்து. இங்கு பொங்கல் பண்டிகை, மாசிமகம் தேர் திருவிழா அதாவது மாரியம்மன் பண்டிகை இன்னும் பல பண்டிகைகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இங்கு பிள்ளையார் கோயில், மாரியம்மன் கோயில், ஆற்றுக்கு செல்லும் வழியில் பழைய கோயிலை புதுப்பித்து புதியதாக கட்டப்பட்டுள்ள பெருமாள் கோயில், கந்தர்மலை முருகர் கோயில் இன்னும் பல கோயில்கள் உள்ளன. இங்கிருந்து 1 கிமீ தொலை கந்தர்மலை முருகர் கோயில் உள்ளது. இந்த கோயில் மலைமீது அமைந்துள்ளது. பங்குனி உத்திரம், மற்றும் கிருத்திகை நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.